MARRIAGE PORUTHAM | திருமண பொருத்தம் பார்த்தல்

திருமண பொருத்தம்

உங்கள் திருமண ஜாதகப் பொருத்தத்தை நமது திருமண பொருத்தம் (Marriage Porutham) கால்குலேட்டரை பயன்படுத்தி துல்லியமாக கணிக்கலாம்.

நமது திருமண பொருத்தம் சாப்ட்வேரில் மணமக்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தை தேர்வு செய்து உங்களுடைய திருமண பொருத்தத்தை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

உங்களுடைய திருமண பொருத்தத்தை (Marriage Porutham) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது திருமண ஜாதக பொருத்தம் கால்குலேட்டரை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

திருமண பொருத்தம் பார்த்தல் | Thirumana Porutham Calculator ⇩

நமது திருமண ஜாதக பொருத்தம் கால்குலேட்டரை பயன்படுத்தி திருமண பொருத்தம் எனக் குறிப்பிடப்படும் பத்துப் பொருத்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் செவ்வாய், சனி, சூரியன் மற்றும் ராகு போன்ற கிரகங்களின் பாப நிலைகளை தெரிந்து கொண்டு அதற்கான மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு பையனுக்கும் பெண்ணுக்கும் பாபசாம்யம் திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதனையும் எளிதாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Marriage Porutham | ஜாதகப் பொருத்தம் பார்க்க ⇩

Marriage Porutham Calculator

திருமண ஜாதகப் பொருத்தம் (Jathagam Porutham)

MARRIAGE PORUTHAM

Marriage Porutham (திருமண ஜாதக பொருத்தம்) இணையதளத்தில் திருமண பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், ஏழாமிடம் பொருத்தம் மற்றும் எட்டாமிடம் பொருத்தம், சூரிய சுக்கிர தோஷம் மற்றும் குரு சுக்கிர தோஷம், கேது சுக்கிர தோஷம் போன்ற தகவல்களையும் ஒருங்கிணைந்து பதிவிட்டு வருகிறோம்.

நமது இணையதளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் பதிவுகளைப் படித்து, நீங்களே உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் எனக் கூறப்படும் ராகு கேது தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

Marriage Porutham திருமண ஜாதக பொருத்தம்

Thirumana Porutham in Tamil | திருமணப் பொருத்தம்

Marriage Porutham Calculator

ஜாதகப் பொருத்தம் (Jathagam Porutham)

Mukkiya Thirumana Porutham | முக்கிய திருமணப் பொருத்தம்

இந்து மதத்தில் திருமணத்தின்போது மணமக்களின் பிறந்த நட்சத்திரம் ராசியை அடிப்படையாக வைத்துக் கொண்டு பத்து வகையான பொருத்தங்களை பார்ப்பார்கள் இதை தான் நாம் பத்துப் பொருத்தம் அல்லது திருமண பொருத்தம் என அழைக்கின்றோம்.

MARRIAGE PORUTHAM திருமண பொருத்தம் பார்த்தல்

இந்த திருமண பொருத்தத்தை நாம் வேறு விதங்களில் குறிப்பிடும்போது ராசி பொருத்தம் மற்றும் நட்சத்திரப் பொருத்தம் என்று குறிப்பிடுகின்றோம். இவை இல்லாமல் ஜாதகப் பொருத்தம் (Marriage Porutham) என்ற ஒன்றும் வழக்கில் உள்ளது. ஜாதக பொருத்தம் என்பது மணமக்களின் பிறந்த ஜாதகத்தை மையமாக வைத்துக் கொண்டு ஜாதகப் பொருத்தத்தை பார்ப்பார்கள்.

திருமண ஜாதகப் பொருத்தம் மற்றும் ராசி நட்சத்திர பொருத்தம் ஆகியவற்றில் இந்த பத்து பொருத்தமும் அடங்கும்.

திருமண பொருத்தம்

திருமணம் என்பதில் இரு உயிர்கள் இரு மனங்கள் இரு குடும்பங்கள் இரு வீட்டு உறவுக்காரர்கள் என பலதரப்பட்ட மனிதர்கள் உறவினர்களாய் மாறுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் மனிதர்கள் ஒரு திருமணத்தின் மூலம் சொந்தங்களாக இணைகிறார்கள். எனவே ஒரு திருமணம் மக்களை இணைக்கும் பாலமாய் காலங்காலமாய் இருந்து வருகிறது‌. ஒரு ஆலமரத்தின் விழுதுகளைப் போல் வேர் விட்டு மண்ணில் வாழ்ந்து வருகிறது,இந்த திருமணம் என்னும் நடைமுறை. எனவே மக்கள் இதனை ஒரு குடும்பத்தின் தலைசிறந்த விழாவாகவே கருதுகின்றனர். சமூகத்திலும் திருமணத்தின் மீதான பார்வை என்பது மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

இப்படி பல சிறப்பம்சங்களை உடைய திருமணம் என்பது எப்படி நிச்சயிக்கப்படுகிறது. இரு மனங்கள் இணைந்தால் தற்போதைய காலகட்டத்தில் திருமணம் எளிதாகி விடுகிறது ஆனால் காலம் காலமாய் தொன்று தொட்டு திருமணம் நடைபெறுவதற்கு முக்கியமான அம்சமாக திருமண பொருத்தம் அல்லது ஜாதக பொருத்தம் என்று ஒன்று பார்க்கப்படுகிறது. நவீன காலமாக உருவெடுத்துள்ள இந்த 2024 ஆண்டில் கூட ஒரு திருமணம் நடைபெறுவதற்கு முன் நிச்சயமாக இரண்டு குடும்பத்தார்களும் திருமண பொருத்தம் அல்லது ஜாதகப் பொருத்தத்தை பார்த்து தான் இறுதியான முடிவை எடுக்கிறார்கள். எனவே அத்தகு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த திருமணப் பொருத்தம் என்றால் என்ன என்பதையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அது என்ன திருமண பொருத்தம் எதைப் பொறுத்து இந்த திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது. திருமணம் செய்ய நினைக்கும் மணமகன் மற்றும் மணமகளுடைய ராசி மற்றும் நட்சத்திரங்களை முதலாவதாக கொண்டு அவர்களுடைய பிறந்த ஜாதகத்தின் வழியே இருவருக்குமான பொருத்தமானது பார்க்கப்படுகிறது. திருமண பொருத்தத்தில் பொதுவாக 12 வகையான பொருத்தங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் ஐந்து பொருத்தங்கள் பொருந்தி இருந்தாலே அவர்களுக்கு திருமணமானது செய்து வைக்கப்படுகிறது.

அந்த ஐந்து பொருத்தங்கள் எவை எவை என்று கீழே குறிப்பிட்டு உள்ளோம்…

திருமணத்திற்கு தேவையான முக்கிய பொருத்தங்கள்

தினப் பொருத்தம்
கணப் பொருத்தம்
ராசி பொருத்தம்
யோனி பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்

இந்த ஐந்து பொருத்தங்கள் மட்டும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேற்கண்ட ஐந்து பொருத்தம் இல்லை என்றால் திருமண ஜாதகம் பொருத்தம் (Marriage Porutham) இல்லை எனக் கூறி அந்த திருமணம் தவிர்க்கப்படுகிறது.

இந்த ஐந்து பொருத்தத்தில் கட்டாயமாக இரண்டு பொருத்தமாவது அவசியம் இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தத்தை தவிர்க்கவே கூடாது.

யோனி பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்

மேற்கண்ட இரண்டு பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யக்கூடாது.

நாம் இந்த பதிவில் இந்த ஐந்து பொருத்தங்கள் உடன் மொத்தமாக உள்ள 12 பொருத்தங்களும் எவை எவை என்றும் அவை எதற்காக பார்க்கப்படுகின்றன என்றும் தெரிந்து கொள்வோம்.

பத்து பொருத்தமும் திருமணமும்

Marriage Porutham Calculator

MARRIAGE PORUTHAM | திருமண பொருத்தம் பார்த்தல்
  1. தினப் பொருத்தம்
  2. கணப் பொருத்தம்
  3. மகேந்திர பொருத்தம்
  4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்
  5. யோனிப் பொருத்தம்
  6. இராசி பொருத்தம்
  7. இராசி அதிபதி பொருத்தம்
  8. வசிய பொருத்தம்
  9. ரஜ்ஜி பொருத்தம்
  10. வேதை பொருத்தம்
  11. நாடிப் பொருத்தம்
  12. விருட்சம் பொருத்தம்
தினப் பொருத்தம்

தினப் பொருத்தம் எனும் பெயரிலேயே அதன் விளக்கமும் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும். ஆமாம் தின பொருத்தம் தினம் தினம் என்பதை குறிக்கிறது. மாலையிட்டு கணவன் மனைவியாக மாற இருக்கும் ஆணும் பெண்ணும் தங்களுடைய வாழ்க்கையில் தினம் தினம் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ போகிறார்கள். அவர்களுக்குள்ளே ஏதேனும் சண்டைகள், பிரிவுகள், சச்சரவுகள் அல்லது தேவையற்ற மனக்கசப்புகள் ஏதேனும் ஏற்பட்டு பிரிய வாய்ப்பு இருக்கிறதா? என்பதை எல்லாம் இந்த தினப்பொருத்தத்தில் கண்டுபிடிக்க முடியும். 50 ஆண்டுகள் இல்லற வாழ்வை மேற்கொள்ள இருக்கும் இந்த தம்பதிகள் எவ்வளவு அன்னியோன்யமாக இந்த வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்பதையே இந்த தினப் பொருத்தம் தெரிவிக்கும்.

இந்த தினப் பொருத்தத்தை பார்ப்பதற்கு பெண்ணினுடைய விண்மீன் அதாவது நட்சத்திரம் எதுவோ அதிலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ண வேண்டும் அவற்றை எண்ணி அதனை 9 ஆல் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுக்கும்போது மீதம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்றால் அந்த இரு நட்சத்திர காரர்களும் மிகவும் பொருத்தமானவர்கள் என்று அர்த்தமாகும்.

அப்படி எண்ணி 9 ஆல் வகுக்கும்பொழுது மீதம் வருகிற எண்ணானது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக இருந்தால் இந்த நட்சத்திரக்காரர்களின் தினப் பொருத்தமானது பொருந்தியுள்ளது என்று அர்த்தமாகும்.

பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வகுக்கும்பொழுது 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 என்ற எண்கள் மீதமாக கிடைக்கும் எனில் இந்த நட்சத்திரக்காரர்களின் தினப் பொருத்தமானது பொருந்தாது.

9 ,18, 27 என்ற எண்களில் வரும் பொழுது தினப் பொருத்தம் சிறப்பாக பொருந்தி உள்ளது என்று அர்த்தமாகும்.

இந்த திருமண பொருத்தங்களை சாதாரண சாமானிய மனிதனால் கணக்கிட்டு தெளிவாக சொல்ல முடியாது எனவே இதற்கென்று பயிற்சி பெற்ற அல்லது காலம் காலமாக ஜாதகம் நட்சத்திரங்கள் மற்றும் குடும்ப அளவிலான ஜோசியர்கள் அவர்களால் மட்டுமே இதனை சரியான முறையில் கணித்து சொல்ல முடியும்.

கணப் பொருத்தம்

கணப்பொருத்தம் திருமண பொருத்தத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் பொருத்தங்களில் ஒன்றுதான் கணப் பொருத்தம். கணப் பொருத்தம் என்பது எதைக் குறிக்கிறது என்றால் திருமண மணமக்களின் குணாதிசயங்கள் மற்றும் குண நலன்கள் ஒத்து போகுமா என்பதையும் அவர்களுக்கிடையேயான தாம்பத்ய உறவுகள் பற்றிய புரிதலையும் காட்டுவது தான் இந்த கண பொருத்தம் என்பதாகும் இதனை மிக முக்கிய பொருத்தமாக பார்க்கின்றனர்.

கணப் பொருத்தத்தில் மூன்று வகையான கணங்கள் இதுவரை இருந்து வருகின்றன ஒன்று தேவ கணம் மற்றொன்று மனித கணம் மற்றும் ஒன்றோ ராட்சச கணம்.

தேவகணமுடைய மணமகன் தேவகணமுடைய மணமகளுடன் தான் சேர வேண்டும் அப்படி இருந்தால் தான் கண பொருத்தமானது பொருந்தும். அதேபோல் மனித கணமானது மனித கணத்துடன் தான் பொருந்தும். ராட்சச கணமானது ராட்சச கணத்துடன் தான் பொருந்தும்.

தேவ கணமுடைய மணமகன் மனித கணமுடைய மணமகளுடனும் அல்லது ராட்சச கணமுடைய மணமகளுடனும் இணங்கி வாழ முடியாது. எனவே கணப் பொருத்தத்தின் மூலமாக தேவ கணம் மற்றும் மனித கணம் மற்றும் ராட்சச கணம் இது மூன்றையும் பொருந்துகிறதா என்று பார்த்து முடிவெடுக்கின்றனர்.

ஒவ்வொரு கணத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. தேவகணமுடைய ஆணோ பெண்ணோ தேவர்களைப் போன்ற சிந்தனைகளையும் எண்ணங்களையும் கொண்டிருப்பர் சிந்தனைகளில் உயர்ந்து எண்ணங்களில் வளர்ந்து மிகவும் சிறப்புடன் வாழ வேண்டுமென்று எண்ணுவார்கள். அதே போல் மனித கணமுடைய ஆணோ பெண்ணோ எளிதில் வளைந்து கொடுத்து எல்லோருடனும் பழகிக்கொண்டு வாழ முற்படுவார்கள். ராட்சச கணமுடைய ஆணோ பெண்ணோ யாருடனும் ஒத்து போக மாட்டார்கள்.

இந்த காரணத்தினாலேயே ஒத்த கணமுடைய ஆணும் பெண்ணும் இணைவது என்பது கணப் பொருத்தத்தில் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரித்திருக்கிறார்கள். அவை தேவ கணம், மனித கணம் மற்றும் ராட்சச கணம்.

ஆண் பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு.

ஒருவருடைய நட்சத்திரம் தேவ கணமாக இருந்து மற்றவருடைய நட்சத்திரம் மனித கணமாக இருந்தால் அவர்களுக்கு மத்தியமான பொருத்தம் உண்டு.

ஒருவருடைய நட்சத்திரம் ராட்சச கணமாக இருந்து மற்றவருடைய நட்சத்திரம் மனித கணமாக இருந்தால் பொருத்தம் இல்லை.

ஆண் நட்சத்திரம் ராட்சச கணமாக இருந்து பெண் நட்சத்திரம் தேவ கணமாக இருந்தால் அவர்களுக்கு மத்தியமான பொருத்தம் உண்டு.

மணமக்களின் வாழ்வில் மங்களம் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியமாகும்.

மகேந்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம் என்பது குழந்தை பாக்கியத்தை குறிக்கும் பொருத்தமாக பார்க்கப்படுகிறது. ஒரு வம்சத்தின் விருத்தியாக ஒரு குழந்தை பிறக்குமா என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த மகேந்திர பொருத்தம் உதவுகிறது. இந்த மகேந்திர பொருத்தத்தின் மூலமாக அந்த தம்பதியினருக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும், ஆண் குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பது வரை சுலபமாக கண்டுபிடிக்க இயலும். அதே சமயம் மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் அந்த திருமணம் செய்ய போகும் மணமக்களுக்கு குழந்தை பேரே கிடைக்காதா? என்ற ஐயமும் பலருக்கும் உண்டு. எனவே இந்த மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்ய வேண்டாமா என்று யோசிப்பவரும் உண்டு. இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது என்னவென்றால் மகேந்திர பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம் எப்படி என்றால் மிக முக்கியமானதாக மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து பொருத்தங்கள் இருந்தால் மட்டும் போதுமானது.

அப்பொழுது குழந்தை பாக்கியம் இல்லை என்றால் பரவாயில்லை என்று நினைக்க வேண்டாம். தினப் பொருத்தமும், கண பொருத்தமும் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குழந்தை பேருக்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. எனவே மகேந்திர பொருத்தத்தை ஒரு அத்தியாவசிய பொருத்தமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பெண் நட்சத்திரம் முதல் எண்ணி வரும்போது ஆண் நட்சத்திரம் 1,4,7,10, 13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு.

இந்த மகேந்திர பொருத்தத்தின் பலன் புத்திர விருத்தி.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்பது மணமகளுடைய ஆயுளும், அத்துடன் நிறைவானதுமான முழுமையானதுமான குடும்ப வாழ்க்கை எப்படி இருக்க போகிறது? அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று பெண்ணானவள் நீண்ட ஆயுளுடன் இந்த மணமகனுடன் நீடுழி வாழ்வாளா? என்பதை கணிக்கும் பொருத்தமாக உள்ளது.

இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தத்தை பார்ப்பதற்கு மணமகளுடைய ஜாதகத்தில் உள்ள நட்சத்திரத்திலிருந்து மணமகனின் நட்சத்திரம் வரை எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணும் பொழுது ஏழு இடங்களுக்கு அப்பால் ஆணினுடைய நட்சத்திரமானது அமைந்துவிட்டால், இந்த பொருத்தமானது இருக்கிறது சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம் ஏழு இடங்களுக்கும் குறைவாக இருந்து விட்டால் இந்த பொருத்தமானது இல்லை என்று அர்த்தமாகும்.

பெண் நட்சத்திரம் தொடங்கி எண்ணி வரும்போது ஆண் நட்சத்திரம் 13க்கு மேலாக இருந்தால் பொருத்தம் உண்டு. அதே 7க்கு மேலானால் மத்தியமான பொருத்தம் உண்டு.

இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தத்தின் பலன் மணப்பெண் ஆயுள் விருத்தி மற்றும் தம்பதிகள் வாழ்க்கையில் இன்பம் பெற இந்தப் பொருத்தம் அவசியம்.

யோனி பொருத்தம்

Marriage Porutham in Tamil திருமண பொருத்தம்

யோனி பொருத்தம் திருமணம் செய்ய நிச்சயக்கப்படும் பொழுது முக்கியமாக பார்க்கப்படும் பொருத்தங்களில் இந்த யோனி பொருத்தம் ஒன்று. யோனி பொருத்தம் நன்றாக இருந்தால் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையும் நன்றாக இருக்கும் அதே போல் குடும்பத்திற்கான வாரிசு குழந்தை பிறப்பும் நிச்சயமாக இருக்கும் என்பதே யோனி பொருத்தம் பார்ப்பதின் அவசியமாகும்.

யோனி பொருத்தத்தின் மூலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயிலான தாம்பத்திய சுகம் எப்படி இருக்கும் இவர்களுக்கு இடையேயான மன புரிதல்கள் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் இந்த பொருத்தத்தின் மூலமாக கணிக்க முடியும்.

ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒரு விலங்கின் குணமானது இருக்கும் எடுத்துக்காட்டாக மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 27 விலங்குகளின் பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது எனவே அந்த நட்சத்திரங்களுக்கு ஏற்ப மிருகங்களின் குணம் ஒன்றாக இணையும் பட்சத்தில் யோனி பொருத்தமானது பொருந்தியுள்ளது என்பதை ஜோதிடர்கள் கணிக்கிறார்கள்.

மகம் – ராஷஸ ஆண் எலி
பூரம் – மானுஷ பெண் எலி
உத்திரம் – மானுஷ பெண் எருது
அஸ்தம் – தேவம் பெண் எருமை

சதயம் – ராஷஸ பெண் குதிரை
பூரட்டாதி – மானுஷ ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – மானுஷ பெண் பசு
ரேவதி – தேவம் பெண் யானை

உத்திராடம் – மானுஷ பெண் மலட்டு பசு
திருவோணம் – தேவம் பெண் குரங்கு
அவிட்டம் – ராஷஸ பெண் சிங்கம்

திருவாதிரை – மானுஷ ஆண் நாய்
பனர்பூசம் – தேவம் பெண் பூனை
பூசம் – தேவம் ஆண் ஆடு
ஆயில்யம் – ராஷஸ ஆண் பூனை

கிருத்திகை – ராஷஸ பெண் ஆடு
ரோகிணி – மானுஷ ஆண் நாகம்
மிருகசீரிஷம் – தேவம் பெண் சாரை

அஸ்வினி – தேவ ஆண் குதிரை!
பரணி – மானுஷ ஆண் யானை
விசாகம் – ராஷஸ ஆண் புலி

அனுஷம் – தேவம் பெண் மான்
கேட்டை – ராஷஸ ஆண் மான்
மூலம் – ராஷஸ பெண் நாய்
பூராடம் – மானுஷ ஆண் குரங்கு

இதில் நட்சத்திரங்களுக்கு ஏற்ப விலங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன மாமிசம் உண்ணும் விலங்குகள் மாமிசம் உண்ணும் விலங்குகளுடன் சேர வேண்டும் அதேபோல் மாமிசம் உண்ணாத விலங்குகள் மாமிசம் உண்ணாத விலங்குகளுடன் சேர வேண்டும் அவ்வாறு பொருந்தினால் யோனி பொருத்தமானது பொருந்தியுள்ளது என்று அர்த்தம்.

நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உள்ளது. இதை அடிப்படையாக வைத்து யோனி பொருத்தம் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண் பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருத்தம் இல்லை என்பது பொருள். அதாவது பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்ய ஒற்றுமை தேவை. அதனால்தான் இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே யோனியில் அமைந்தால் பொருத்தம் உண்டு. அதே வேறு யோனியில் அமைந்தால் மத்தியமான பொருத்தம் உண்டு.

அதே பகையாக ஆண் பெண் யோனி இருப்பின் பொருத்தம் இல்லை என்பது பொருள்.

இந்த யோனி பொருத்தத்தின் பலன் அன்யோன்ய அன்பை குறிக்கிறது.

ராசி பொருத்தம்

ராசி பொருத்தம் மிகவும் முக்கியமான பொருத்தங்களில் ஒன்றாகும். அந்த குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்குமா? என்பதை பற்றிய கேள்விக்கு விடை அளிக்கக்கூடிய பொருத்தம் இந்த ராசி பொருத்தம் ஆகும். ராசி பொருத்தமானது கனககச்சிதமாக பொருந்தியிருந்தால் நிச்சயம் அந்த மணமக்களுக்கு ஆண் குழந்தையானது பிறக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் ராசி பொருத்தத்தை கண்டறிய பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து
ஆறு நிலைகளுக்கு தள்ளி ஆண் நட்சத்திரமானது இருந்தால் ராசி பொருத்தமானது உள்ளது என்று அர்த்தம் ஆகும்.

பெண் ராசி முதல் ஆண் ராசி வரை எண்ணினால் 9 ராசிக்கு மேலாக இருப்பின் பொருத்தம் உண்டு. 8 ஆம் ராசி கூடாது.

இதன் பலன் வம்சாவளி ஆண் விருத்தி மற்றும் வம்ச விருத்தி மற்றும் மன ஒற்றுமையை குறிப்பிடுகிறது.

ராசி அதிபதி பொருத்தம்

ராசி பொருத்தம் ராசி அதிபதி பொருத்தமும் கிட்டத்தட்ட ஒன்று.ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி அதே போல் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அதிபதி என்று ஜாதகத்தில் உள்ளது. எனவே ராசி அதிபதிகளுக்கு இடையேயான பொருத்தம் எப்படி இருக்கிறது என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த ராசி அதிபதி பொருத்தம்.

பெரும்பாலும் நட்பு, பகை, சமம் இந்த மூன்று வகையில் தான் ராசி அதிபதிகளுக்கு இடையேயான உறவானது இருந்து வருகிறது. இதில் பகையைத் தவிர மீதி இரண்டில் எது வந்தாலும் அந்த ராசி அதிபதி களுக்கு பொருத்தம் உள்ளது என்று அர்த்தமாகும். பகை என்று மட்டும் வந்து விடக்கூடாது.

பெண் ராசி அதிபதியும் மற்றும் ஆண் ராசி அதிபதியும் நட்பாக இருந்தால் பொருத்தம் உண்டு. அதே பகையாக இருந்தால் பொருத்தம் இல்லை என்பது பொருள்.

மணமக்கள் இருவரும் மனம் ஒத்த தம்பதியராக வாழ்நாள் முழுவதும் இனிமையாக இருக்க இரு வீட்டாரின் நல்லுறவும் அவசியம். இந்த ராசி அதிபதி பொருத்தமானது சம்பந்திகளின் நட்பு மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது. அதற்குத்தான் இந்த ராசி அதிபதி பொருத்தம் பார்க்கிறோம்.

வசிய பொருத்தம்

வசிய பொருத்தம் பெயரிலேயே இதற்கான அர்த்தமும் பொருந்தி உள்ளது. திருமணம் செய்து கொள்ள போகும் ஆணும் பெண்ணும் தங்களை வசப்படுத்தி வசியப்படுத்தி நீண்ட காலம் புரிதலுடனும் அன்புடனும் வாழ்வார்களா? என்பதையே இந்த பொருத்தம் குறிக்கிறது. இந்த பொருத்தத்தை பார்ப்பதற்கான அவசியம் என்னவென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சலிப்புத் தன்மை அல்லது சகிப்புத்தன்மை குறைந்து போய் அவர்களிடையே பிரிவானது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே அவர்களிடையே இந்த வசிய பொருத்தமானது இருந்தால் அவர்கள் ஒருவரின் மீது ஒருவர் அன்பு கொண்டு நீண்ட காலம் ஒற்றுமையாய் வாழ்வார்கள் என்பது இதன் பொருளாகும்.

எந்த ராசிக்கு எந்த ராசி வசியப்படும் என்பது குறித்து ஒரு அட்டவணை உள்ளது. அதை கீழே அட்டவணைப்படுத்துகிறோம்…

இடது பக்கம் உள்ளது பெண்ணின் ராசியாக கருதுவோம். இடது பக்கம் உள்ள பெண்ணின் ராசிகள் வலது பக்கம் உள்ள ஆணின் ராசிகளுடன் பொருந்தும் என்பதே இதன் பொருளாகும். எனவே பெண் ராசிகளை இடது பக்கமாக கணித்துக் கொண்டு அதற்கு இணையான பொருந்துவதுமான ஆண் ராசிகள் வலது பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வலது பக்கம் உள்ள ராசிகள் பெண்ணின் ராசிகளாக இருந்தால் இடது பக்கம் உள்ள ராசிகள் ஆணின் ராசிகளாக எடுத்துக்கொண்டு பொருந்துவதாக நினைக்கக் கூடாது. அது ஒரு சமநிலை என்ற மனப்பான்மையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் முற்றிலுமாக பொருந்துகிறது என்று அர்த்தமில்லை.

மேஷம் – சிம்மம், விருச்சகம்

ரிஷபம் – கடகம், துலாம்

மிதுனம் – கன்னி

கடகம் – விருச்சிகம், தனுசு

சிம்மம் – துலாம், மீனம்

கன்னி – ரிஷபம், மீனம்

துலாம் – மகரம்

விருச்சகம் – கடகம், கன்னி

தனுசு – மீனம்

மகரம் – மேஷம், கும்பம்

கும்பம் – மீனம்

மீனம் – மகரம்

மணமக்களுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியமாகும். அப்பொழுதுதான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்பட்டு இருப்பர்.

ரஜ்ஜு பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம்… திருமணத்திற்காக பார்க்கப்படும் பொருத்தங்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பொருத்தம் என்றால் அது இந்த ரஜ்ஜு பொருத்தம் தான். பத்து பொருத்தங்களில் 9 பொருத்தங்கள் பொருந்தி இருந்தும் ரஜ்ஜீ பொருத்தம் மட்டும் பொருந்தாமல் இருந்தால் நிச்சயம் அந்த திருமணத்தை நடத்த மாட்டார்கள் ஏனென்றால் ரஜ்ஜு பொருத்தம் என்பது மணமக்களின் உயிர் மற்றும் உடல் அவர்களின் வாரிசுகள் குறித்த கணிப்புகள் நிறைந்த மிக முக்கியமான பொருத்தம் ஆகும்.

சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, பாத ரஜ்ஜீ, ஊரு ரஜ்ஜு என ஐந்து வகையான ரஜ்ஜுகள் உள்ளன.

சிரசு ரஜ்ஜு என்றால் தலை என்று பொருளாகும் சிரசு ரஜ்ஜு ஆனது பொருந்தவில்லை என்றால் தலைவன் அதாவது திருமணம் செய்ய போகும் ஆணுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம் ஆகும்.

கண்ட ரஜ்ஜீ, கண்ட என்பது கழுத்தைக் குறிக்கிறது அதாவது மாங்கல்யம் அணிய போகும் கழுத்தைக் குறிப்பதாகும் அதை தெளிவாக கூற வேண்டும் எனறால் திருமணம் ஆகப்போகும் பெண்ணிற்கு பெரும் பாதிப்பை கொடுப்பதாகும்.

உதர ரஜ்ஜீவானது வயிற்றைக் குறிக்கும். இதுபொருந்தாமல் இருப்பின் அவர்களின் வாரிசுகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் அல்லது பிறந்த குழந்தைகளின் காலமானது முடிவடையும்.

ஊரு ரஜ்ஜீ ஆனது இருந்து விட்டால் அவர்களின் வீட்டில் எந்த செல்வமும் நிலைக்காது. வறுமை தாண்டவம் ஆடும். எல்லா செல்வங்களும் கண் முன்னே இழக்க நேரிடும்.

பாத ரஜ்ஜீவானது பொருந்தாவிட்டால் இருவருக்குமான பிரிவானது நிச்சயம் ஏற்படும். திருமணம் செய்யப் போகும் ஆண் பெண் இருவரும் நிச்சயம் பிரிந்தே வாழ்வர்.

பத்து பொருத்தத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த ரஜ்ஜு பொருத்தம்

பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தால் கூட ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ரஜ்ஜு பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர்.

இந்தப் பொருத்தத்தின் பலன் தீர்க்க சுமங்கலியாக மனைவி இருக்க இந்த ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது.

வேதைப் பொருத்தம்

வேதைப் பொருத்தம், முன்பெல்லாம் பத்து பொருத்தங்கள் மட்டுமே பார்த்து திருமணம் செய்தார்கள். தற்பொழுது பத்தோடு இன்னும் இரண்டு சேர்ந்து 12 பொருத்தங்களாக பார்க்கின்றனர். வேதை என்பது தாக்கிக் கொள்ளுதல் அதாவது ஆண் நட்சத்திரங்களும் பெண் நட்சத்திரங்களும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளாமல் இருப்பதே இந்த வேதை பொருத்தமாகும். அத்தோடு வேதைப் பொருத்தமானது நடக்கவிருக்கும் திருமணத்தின் பலத்தைக் குறிப்பதாகும். எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த நட்சத்திரங்களுடன் தாக்கிக் கொள்ளும் அதாவது வேதையாக நிற்கும் என்பதை கீழே பட்டியலிடலாம்.

உத்திரத்திற்கு – பூரட்டாதி வேதை ஆகும்.
கார்த்திகைக்கு – விசாகம் வேதை ஆகும்.
அசுவினிக்கு – கேட்டை வேதை ஆகும்.
புனர் பூசத்திற்கு – உத்ராடம் வேதை ஆகும்.
பூசத்திற்கு – பூராடம் வேதை ஆகும்.
ஆயில்யத்திற்கு – மூலம் வேதை ஆகும்.
பூரத்திற்கு – உத்ரட்டாதி வேதை ஆகும்.
ரோகிணிக்கு- சுவாதி வேதை ஆகும்.
மகத்திற்கு – ரேவதி வேதை ஆகும்.
திருவாதிரைக்கு – திருவோணம் வேதை ஆகும்.
அஸ்தத்திற்கு – சதயம் வேதை ஆகும்.
பரணிக்கு – அனுஷம் வேதை ஆகும்.

வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று பொருளாகும். வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதைப் பொருத்தம் என்பது மாங்கல்ய பலத்தை குறிப்பிடுவது.

ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரம் ஒன்றுக்கொன்று வேதை இல்லாமல் இருந்தால் அதை வேதைப் பொருத்தம் உண்டு என்கிறோம்.

பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக இருந்தால் திருமணமான பிறகு அவர்களது வாழ்க்கையில் சண்டை சச்சரவு ஏற்படக்கூடும்.

மணமக்களுக்கு வேதை பொருத்தம் சரியாக அமைந்து விட்டால் அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் எந்த காலத்திற்கும் துன்பம் வராமல் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வராமல் இருப்பதற்காக இந்த வேதை பொருத்தம் பார்க்கப்படுகிறது.

நாடி பொருத்தம்

நோய் நொடி இல்லாமல் ஆண் பெண் இருவரும் நீடூழி வாழ்வார்களா என்பது தான் இந்த நாடிப் பொருத்தத்தின் மூலம் தெரிந்து கொள்வதாகும் நாடியின் வகைகள் மூன்று உள்ளன.

  1. பித்த நாடி
  2. வாத நாடி
  3. நீர்ம நாடி

ஒரே நாடி உடைய ஆண் பெண் இருவரும் சேர்வது கூடாது. அதே சமயம் வெவ்வேறு நாடிகளுடைய ஆண் பெண் இருவரும் சேர்ந்து வாழலாம்.

நாடிப் பொருத்தம் மிகவும் அவசியமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். முதலில் கூறிய ஐந்து பொருத்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு கூட திருமணங்களை மேற்கொள்ளலாம்.

விருட்சப் பொருத்தம்

விருட்சப் பொருத்தம், விருட்சம் என்பது மரத்தைக் குறிக்கும். கிட்டத்தட்ட இந்த பொருத்தமானது திருமணம் செய்யப்போகும் ஆண் பெண் இருவர்களின் குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட பொருத்தமாகும். இந்த பொருத்தமானது பொருந்தியிருந்தால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உறுதி.

ஒவ்வொருவரின் ராசி நட்சத்திரங்களுக்கு ஏற்ப ஒரு மரமானது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ஆண் பெண் இருவருக்கும் அவர்களுடைய ராசி நட்சத்திரங்களுக்கு ஏற்ற வகையில் உள்ள மரத்தை பார்த்து பொருத்தத்தை கணிக்க வேண்டும். அப்படி வரும் மரம் ஆனது பால் மரமாக இருப்பின் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதே வல்லுனர்களின் வாக்கு.

குறிப்பு:

உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கிறீர்கள் என்றால், முதலில் திருமணத்திற்கு தேவையான ஜாதக பொருத்தங்கள் அவர்களது ஜாதகத்தில் உள்ளதா என்பதனை எளிமையாக அறிந்து கொள்ள நமது ஜாதக பொருத்தம் இணையதளத்தில் நாங்கள் உங்களுக்காக ஜாதக பொருத்தம் சாப்ட்வேர் வழங்கியுள்ளோம்.

நமது ஜாதக பொருத்தம் (Marriage Porutham) இணையதளம் உங்களுக்கு உதவிகரமாக அமையும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒவ்வொரு முறையும் பொருத்தம் பார்க்க நீங்கள் ஜோதிடரை நாடி செல்ல வேண்டிய தேவை இருக்காது.

நீங்களே நமது இணையதளத்தில் ஜாதக பொருத்தம் பார்க்கலாம். பிறகு உங்களது மகனுக்கு அல்லது மகளுக்கு பொருந்திய ஜாதகத்தை எடுத்துச் சென்று உங்களுக்கு உள்ள சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள ஜோதிடரை அணுகலாம்.